காதலிக்கு கத்தியால் சதக் சதக்..! தேக சுகம் தேடி நாமக்கல் சென்றதால் விபரீதம்! காதலன் அரங்கேற்றிய திடுக் சம்பவம்!

தன்னுடைய காதலிக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையின் வாசம் ஈர்க்க ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார் காதலன். காதலனும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.


நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலேயே கோட்டூரில் வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  

இதற்கிடையே டிக் டாக் செயலி மூலம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேறு ஒரு இளைஞரின் அழகு பெண்ணின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் அவரிடம் மயங்கி காதலிக்கத் தொடங்கியுள்ளார். இது எப்படியோ திருவாரூர் காதலனுக்கு தெரிந்துபோக வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்த்து வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே நாமக்கல்லில் அறிமுகம் ஆன இளைஞருடன் உல்லாசமாக இருப்பதற்காக அங்கு சென்றுள்ளார் நாகை காதலி. இதை தெரிந்து கொண்ட திருவாரூர் காதலன், காதலியை பின்தொடர்ந்து சென்று நாமக்கல் இளைஞர் காத்திருந்த இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கு இருவரையும் மிரட்டி ஆட்டோவில் மீண்டும் கோட்டூர் பகுதிக்கு வரவழைத்துள்ளார் திருவாரூர் காதலன்.

அப்போது அந்த பெண்ணுக்கும், திருவாரூர் காதலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த திருவாரூர் காதலன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் காதலி. இதனால் பயந்து போன திருவாரூர் காதலன் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தற்போது காதலி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருவாரூர் காதலன் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை அடுத்து டிக் டாக் செயலியில் அறிமுகம் ஆன நாமக்கல் காதலனுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. நாம் எதையோ செய்யப்போக தேவையில்லாமல் வந்து போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொண்டோம் என முதலில் தன்னுடைய செல்போனில் இருந்த டிக் டாக் செயலியை எடுத்துவிட்டாராம்.

டிக் டாக் பயன்படுத்த வேண்டாம் என சொல்லும்போது கசந்த அறிவுரை தற்போது இனிக்கிறது. அனுபவம் மட்டுமே பாடம் சொல்லித் தருகிறது.