இறுக்கி அணைச்சி ஒரு உம்மா..! கேரளாவில் ராகுலுக்கு கிடைத்த செம ஹாட் முத்தம்! வைரல் வீடியோ!

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கடலோர மாநிலங்களான கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு பல்வேறு இயற்கை சீற்றங்கள் அரங்கேறி விட்டனர்.


தற்போது மழை ஓய்ந்துள்ளதால் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல பொதுமக்கள் மீண்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி நீண்ட நாட்கள் காத்திருந்தார்.

மேலும் கேரள மக்களுக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும் என மாநில அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி வந்தார். இதையடுத்து வயநாடு தொகுதி எம்.பி. என்ற அடிப்படையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்றார்.

மக்களிடம் பொறுமையாக குறைகளே கேட்டறிந்த வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறினார். பின்னர் அவர் காரில் அமர்ந்து சென்றவாறே பொதுமக்களுக்கு கை குலுக்கினார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு இளைஞர் ஓடியவாரே சென்று பாசத்துடன் ராகுல் காந்திக்கு முத்தமிட்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூவலைதளம் பயன்படுத்துவோருக்கு தீனியாகி உள்ளது. ஆனாலும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு ஒருவர் அநாவசியமாக சென்று முத்தமிட்டது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

எற்கனவே கருணாநிதி மறைந்தபோது ராகுல்காந்தி அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அரைமணிநேரம் பாதுகாப்பு பணியாளர்கள் யாரும் இல்லாமல் அரைமணிநேரம் இருந்தது நாடு முழுவதும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.