துடிக்க துடிக்க மனைவி வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்! பிறகு நேர்ந்த கொடூரம்!

மேற்கு வங்க மாநிலத்தில் தனது கணவனி ஐ.பி.எல். பெட்டிங்க் விவகாரங்களுக்கு எதிராக குரல் கொடுத்த பெண் ஆசிட்டை குடிக்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.


மேற்கு வங்க மாநிலம் மால்டாவைச் சேர்ந்தவன் சுவேந்து தத்தா. இந்த நபர் ஐ.பி.எல். பெட்டிங்குகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சுவேந்துவின் மனைவி அர்பிதா தாஸ் குப்தா தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வந்தார். சம்பவத்தன்று ஒரு மேட்சுக்கான பெட்டிங் நடவடிக்கைகளில் சுவேந்துவம் அவனது குடும்பத்தினர் 4 பேரும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதற்கு அர்பிதா கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுவேந்து மற்றும் அவனது குடும்பத்தைச் சேர்ந்த கும்பல் அர்பிதாவின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றி குடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உள்ளுறுப்புகள் வெந்துபோன நிலையில் துடிதுடித்த அர்பிதா பின்னர் சுயநினைவிழந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

இந்நிலையில் அர்பிதாவின் மகள் தனது தாத்தாவுமான சந்தோஷ் தத்தாவிடம் தொலைபேசி மூலம் விவரத்தைச் சொன்னதையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்ற போது தனது மகளை அவர் சடலமாகத் தான் காண முடிந்தது. சந்தோஷ் தத்தாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள சுவேந்து மற்றும் அவனது  குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.