அல்லாஹூ அக்பர்! அல்லாஹூ அக்பர்! இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் விநோத கூச்சல்! பதறிப்போன மாநகரம்!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் பெண் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர் இஸ்லாமிய மதத்தை போற்றும் வகையில் கூச்சலிட்டுக் கொண்டே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண்ணை குத்திவிட்டு அந்த நபர் தப்பி ஓடியதும், பொதுமக்கள் ரிஸ்க் எடுத்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த காட்சிகளும் போலீசாரால் வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை மாநகரம் போல் பரபரப்பாக 24 மணிநேரமும் இயங்கும் சிட்னி நகரில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் நெருங்கிய மர்மநபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த காட்சியை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.பின்னர் அந்த நபரை பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர் இஸ்லாமிய மதத்தை போற்றும் வகையில் “அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் !” என்று கத்திக்கொண்டே சாலையில் ஓடியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

பின்னர் உயிரை துச்சமென மதித்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தியால் குத்தப்பட்ட பெண் வேறு மதத்தை சார்ந்தவரா அல்லது இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து ஏதேனும தெரிவித்ததால் அவர் தாக்கப்பட்டாரா அல்லது வேறு எதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

உலகெங்கும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடிவரும் நிலையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடைபெற்றிருப்பது நல்ல உள்ளம் கொண்ட இஸ்லாமியர்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.