ரகசிய காதலனுக்காக வாடகை வீடு! பாலுக்கு அழுத பச்சிளம் குழந்தை கொடூர கொலை! பதற வைத்த சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்தவனையும், அவனது கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்துள்ளனர்


கழுகுமலையை அடுத்த பழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜு மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி வடகாசி. இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ராஜு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது இதனால் ஆறுதல் தேடிய வடகாசிக்கு வீட்டுக்கு பால் ஊற்ற வரும் சாமிநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தவறான உறவாக மாறிய நிலையில் வட காசிக்காக சாமிநாதன் தனியாக வீடு எடுத்தார்

அங்கு அவ்வப்போது இருவரும் தனிமையில் இருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதற்காக தனியாக வீடு ஒன்றையே வடகாசி வாடகைக்கு எடுத்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட ராஜூ கண்டித்த போதும் இருவருக்கும் இடையேயான தவறான தொடர்பு தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் ஒரு நாள் ராஜு இரவு பணிக்கு சென்று இருந்தபோது வடகாசி தனது குழந்தையையும் எடுத்துக்கொண்டு வாடகைக்கு பிடித்திருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் தனிமையில் இருந்தபோது குழந்தை பாலுக்காக வீறிட்டு அழுததாகக் கூறப்படுகிறது.

தங்கள் உறவுக்கு இடையூறாக இருந்த அந்த குழந்தை மீது சாமிநாதனுக்கு அடக்க முடியாத ஆத்திரம் ஏற்பட்டது. குழந்தையை புடவையால் கட்டப்பட்டிருந்த துளியோடு சேர்த்து அவன் சுவற்றில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் அந்தக் குழந்தை துடிதுடித்து அதே இடத்தில் உயிரிழந்தது அவர்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று மாடிப்படியில் உருண்டு விழுந்து விட்டதாகவும் சிகிச்சை அளிக்குமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பான மருத்துவர்களின் தகவலின் பேரில் சாமிநாதனையும் வட காசியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அவர்கள் பின்னர் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.