சபல கேஸ் அடைக்கலத்திடம் சிக்கிய ஈஸ்வரி! விடாமல் பணம் கறந்ததால் ஏற்பட்ட கொடூரம்! விருதுநகர் பரபரப்பு!

விருதுநகர்: அடிக்கடி பணம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலியை, காதலனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அருப்புக்கோட்டை அருகே அத்திப்பட்டி அடுத்துள்ள கட்டக்கஞ்சன்பட்டி கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசித்து வரும் திருமுருகன் என்பவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார்.

இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (35 வயது) புதன்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரின் தந்தை அருப்புக் கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில், அங்காள ஈஸ்வரிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அடைக்கலம் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக தெரியவந்துள்ளது. 

இதன்படி, 45 வயதான அடைக்கலம், அடிக்கடி ஈஸ்வரியுடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். இதனை பயன்படுத்தி, அவரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்துள்ளார்.

இதுவரை ஈஸ்வரிக்கு ரூ.2 லட்சம் வரை அடைக்கலம் பணம் கொடுத்திருக்கிறார். இருந்தும் பணம் கேட்டு ஈஸ்வரி தொல்லை கொடுத்து வந்ததால், வேறு வழியின்றி, அடைக்கலம் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தலைமறைவானார்.

இது தெரிந்ததும், அந்த நபரை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.