கல்யாணம்! விவாகரத்து! பிறகு காதல்! இளம் பெண்ணுக்கு அப்புறம் நேர்ந்த பயங்கரம்!

திருச்சி: காதலிக்க மறுத்த பெண் மீது இளைஞர் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா, திருச்சி அரசு சட்ட கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஏற்கனவே திருமணமான ரம்யா, தற்போது விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

திருச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக வீடு ஒன்றை எடுத்து அதில் தங்கி ரம்யா படித்து வருகிறார். இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தவச்செல்வன் என்பவர் ரம்யாவை அடிக்கடி சந்தித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். 

ஆனால், ரம்யா அவரை காதலிக்க மறுத்துவிட்டாராம். இதனால், விரக்தி அடைந்த தவச்செல்வன், தனக்கு கிடைக்காதது எவனுக்குமே கிடைக்கக்கூடாது என்ற 'உயரிய நோக்குடன்' நேற்று ரம்யா தங்கியுள்ள வீட்டிற்கு வந்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துவிட்டு தப்பியோடி விட்டாராம்.

உடனடியாக, அக்கம்பக்கத்தினர் ரம்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடிவருகின்றனர்.