ஒரு தலை காதலியின் தந்தையை கடத்தி காதலன் செய்த விபரீத செயல்! அதிர்ச்சியில் போலீஸ்!

மகளை திருமணம் செய்து வைக்கக்கோரி அவரது தந்தையை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திய சஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


டெல்லியில் சஞ்சு 24 ,என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று அப்பெண்ணின் தந்தையை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியுள்ளார். அப்பெண்ணின் தந்தை  துவாரா  பகுதியில் ஒரு கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார் . இதனை அறிந்த சஞ்சு அவரை கடத்த திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஞ்சு அவரிடம் சென்று உங்கள் மகளை தனக்கு கட்டித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தந்தை பெண்ணை கட்டி தர முடியாது எனவும்  உனக்கு வேலை இல்லை எனவும் திட்டி தீர்த்துள்ளார். பின்னர் தனது வீட்டையும் மாற்றியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த சஞ்சு அவரை கடத்த திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த திட்டத்தில் தன்னுடன் தனது நண்பர்களான இருவரையும் சேர்த்துக் கொண்டுள்ளார். திங்கட்கிழமை அன்று அவரது திட்டம் அரங்கேறியுள்ளது. தனது தந்தையிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராத நிலையில் உடனே அவரது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது கடத்தியவர் சஞ்சு தான் என தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் திங்கட்கிழமை இரவு சஞ்சு மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தையிடம் போலீசார் கேட்டபோது அவர் கூறியதாவது தன்னை கடத்தி வந்து மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும், நான் நல்லவன் எனவும் தன் மகளிடம் கூற வேண்டும். இல்லையென்றால் தன்னை கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சஞ்சு மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.