புர்காவை ஏன் ஒழுங்கா போடவில்லை? முஸ்லீம் பெண்ணை நடு ரோட்டில் எட்டி உதைத்த ஆண்! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

டெஹ்ரான்: புர்கா சரியாக அணியாத பெண்ணுக்கு அடி உதை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 1979ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற புரட்சிக்குப் பின்னர் 13 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், இந்த சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் புர்கா சரியாக அணியாத பெண் ஒருவரை சிலர் அடித்து உதைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.   பெண்ணை அடித்து உதைத்த நபரின் கார் பதிவு எண்ணை வைத்து அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.