கள்ளக் காதலியின் மாமியார் வீட்டுக்கு சென்று உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்!

பிந்த்: கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த நபருக்கு அடி, உதை விழுந்துள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் உள்ள சிலோலி கிராமத்தைச் சேர்ந்தவர், 28 வயது இளைஞர். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதோடு, அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர், அவரது கணவர் ஜெய்ப்பூரில் வேலை பார்க்கிறார்.

கணவன் வீட்டில் இல்லை என்பதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 4ம் தேதியன்று, அந்த பெண்ணின் மைத்துனர் வீட்டில் வைத்து, அவரை இரவு நேரத்தில் சந்தித்து உல்லாசமாக இருக்கும் ஆசையில் குறிப்பிட்ட இளைஞர் சென்றிருக்கிறார்.

அப்போது, அவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்தனர். இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த கிராம மக்கள், அவருடன் பழகியதற்காக, அந்த பெண்ணையும் இழுத்துப் போட்டு உதைத்துள்ளனர். இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பெண்ணையும், இளைஞரையும் தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.