உயிருக்கு உயிரான காதலியின் தகாத உறவு! கண்டுபிடித்த காதலன் எடுத்த விபரீத முடிவு!

மும்பையில் தனது தகாத உறவின் மூலம் காதலனை தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு பெண்ணையும் அவரது ஆண் நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மும்பையின் அம்போலியைச் சேர்ந்த ஷோபித் சிங் என்பவர் ஒரு உயர்தர முடிதிருத்தும்  மையத்தின் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஷோபித் சிங்கின் கடந்த மாதம் 13-ஆம் தேதி மாயமான நிலையில் அவரது குடியிருப்பில் இருந்து அவரது  நண்பரான பங்கஜ் சவுகான் ஒரு தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றினார். 

அதில் ஷோபித் சிங் தான் தனது பெண் தோழியை மிகவும் அதிகமாக நேசிப்பதாகவும், வாழ்நாள் முழுவதும் அவளுடன் வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தப் பெண் வேறு இரு ஆண் நண்பர்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். தான் இது குறித்து தட்டிக் கேட்ட போது அந்தப் பெண்ணும் இரு ஆண் நண்பர்களும் தன்னை தாக்கியதாகவும் தன்மீது பொய்யான பாலியல் புகார் கொடுக்கப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார். 

காதலியுடன் வாழும் கனவு நிறைவேறாத நிலையில் உலகத்தில் இருந்து விடை பெறுவதாகவும் கூறியிருந்தார். தனது மரணத்த்துக்கு தனது காதலியும் ஆண் நண்பர்களும் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்து பங்கஜ் எஸ்.எம்.எஸ். மூலம் அளித்த தகவலின் பேரில் ஷோபித் சிங்கின் முதலாளி மிக்கெய்ல் சந்திரமணி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் குன்றுப் பகுதி ஒன்றில் அழுகிய நிலையில் கடந்த 30-ஆம் தேதி ஷோபித் சிங்கின் உடலை மீட்டனர். இந்நிலைய்யில் தலைமறைவான பெண் தோழியையும் அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.