குளியல் அறையில் பார்க்க கூடாததை பார்த்த மனைவி! கணவன் மடியில் மயங்கிய விபரீதம்!

கழிவறையில் 7 அடி நீள மலைப்பாம்பை பார்த்த அதிர்ச்சியில் பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.


இந்த சம்பவம் மும்பையின் புறநகர் பாந்தப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இங்கு மலைப்பகுதி ஒன்று உள்ளது. இதையொட்டி அமைந்துள்ள கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான குடியிருப்பில், தரைத்தள வீடு ஒன்றில், வினய் தோப்ளே என்பவர் வசித்து வருகிறார். இவர், நேற்றிரவு டாய்லெட் செல்வதற்காக, உள்ளே சென்றுள்ளார்.

டாய்லெட் கதவை திறந்து பார்த்தால், உள்ளே 7 அடி நீள மலைப்பாம்பு நெளிந்தபடி கிடந்துள்ளது. இதைக் கண்டதும், வினய் தோப்ளே அதிர்ச்சி அடைந்து, கூச்சலிட்டார். பின்னர், தனது மனைவி, குழந்தைகளை எழுப்பி இந்த செய்தியை சொல்லியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட அவரது மனைவி மயங்கிவிழுந்துவிட்டார்.

இதையடுத்து, வினய், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து, நள்ளிரவு 2 மணிக்கு, அந்த மலைப்பாம்பை பிடித்துச் சென்றனர். இவர்களின் வீட்டை ஒட்டி, சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.