விமானத்தில் பறந்து கொண்டே சிறுமியுடன் உல்லாசம்! தொழில் அதிபரின் விபரீத செயல்!

அமெரிக்காவின் நியூஜெர்ஸியை சேர்ந்த ஸ்டிபென் பிராட்டிலே மெல், ஒரு அமெரிக்க விமானி ஆவார்.


விமானம் ஓட்டுவதில் மிகுத்த ஆர்வம் கொண்டவர் இவர், தன்னுடைய 16 வது வயதில் விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸை பெற்றார். 53 வயதாகும் மெல், அமெரிக்காவின் மிக பெரிய தொழிலதிபர் ஆவார். கடந்த 2018-ஆம் ஆண்டு, 15 வயது உடைய சிறுமி ஒருவளை பறக்கும் விமானத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மெல்லிடம் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிக்காக சிறுமியின் தாயார், சிறுமியை அனுப்பியுள்ளார். இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்திக்கொண்டார் மெல். இந்த சிறுமிக்கு விமானம் ஓட்ட கற்றுகொடுப்பதற்காக தன்னுடைய சொந்த விமானத்தில் சிறுமியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.

அப்போது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள நினைத்த மெல் விமானத்தை ஆட்டோ மோடில் போட்டுவிட்டு சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஆபாசமாக சிறுமியை உடல் அங்கங்கள் தெரியும் அளவிற்கு புகைப்படங்களை எடுத்துள்ளார்.  இதனை பயன்படுத்தி சிறுமியை மீண்டும் உல்லாசத்திற்கு வரவழைக்க முடிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் சிறுமியின் தாயாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, கடந்த செவ்வாய் கிழமை அன்று விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவரை சிறையில் அடைக்க உத்தரவு இட்டுள்ளது. இன்னும் இந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பு எட்டவில்லை.