சீனாவில் மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது!
மனித முகத்துடன் ஆற்றில் சுற்றித் திரியும் கொடூர மீன்கள்..! நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! எங்கு தெரியுமா?
சீனாவின் பிரபல சுற்றுலா தல பகுதியை அடுத்த மியாவ் என்ற கிராமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருடம்தோறும் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கு சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இயற்கை காட்சிகள் இருக்கும் குறிப்பாக படகு சவாரி என்பது அங்கே மிகவும் பிரசித்தி பெற்றது.
படகு சவாரியில் செல்லும்பொழுது அரிய வகை மீன்கள் அவ்வபோது பார்வையாளர்கள் கண்ணில் பட்டு அவர்களை பூரிக்க செய்யும். அந்த வகையில் அந்த சுற்றுலா பகுதிக்குச் சென்ற பெண் ஒருவர் மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்றை கண்டு ஆச்சரியத்தில் உறைந்து உள்ளார்.
அதனை தனது செல்போனில் படம் எடுத்து சீனாவின் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார். இது சீனாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலாகி வர அது எந்த வகை மீன் என பலரும் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும் மனித முகம் கொண்ட அந்த அபூர்வ வகை மீனை கண்டு ஆச்சரியத்திலும் திகைத்துப் போயுள்ளனர்.