சொட்டை தலையில் முடி வளர்க்க 50 மணி நேரம் ஆப்பரேசன்! இறுதியில் தொழில் அதிபருக்கு நேர்ந்த கொடூரம்!

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தலை முடி வளர்வதற்கான சிகிச்சை எடுத்த பின்னர் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தார்.


மத்திய மும்பையிலுள்ள போவாய் என்ற நகரைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார் சவுத்ரி. இவர், தலை முடி வளர்வதற்கான சிகிச்சையை ஒரு தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டுள்ளார். மார்ச் 7-ஆம் தேதி 12 மணிநேரம் இவருக்கு சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதிகாலை இரண்டரை மணி அளவு வரை சிகிச்சை நீடித்துள்ளது.

மறுநாள் தொழில் அதிபருக்கு அலர்ஜி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகம் மற்றும் தொண்டையில் கட்டிகள் தோன்றியுள்ளன. அனபைலாக்ஸ் என்ற அலர்ஜி இவருக்கு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு மறுநாளே அந்த தொழில் அதிபர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக விபத்து என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவ நிபுணரை விசாரிக்கையில், தொழிலதிபரான ஷ்ரவன் குமார் சவுத்ரி, ஒரே சிகிச்சையில் 9 ஆயிரம் முடிகளை தனது தலையில் வளர வைக்க வேண்டும் என கட்டளையிட்டதாக கூறியதாக தெரிவித்தார்.

இது மருத்துவ நெறிமுறைக்கு எதிரானது என்றும், ஒரே முறையில் 3,000 முடிகளை வளர வைப்பது கடினமானது என்பதை அவரிடம் தெரிவித்ததாகவும் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னரே, உயிரிழப்புக்கான தெளிவான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.