உயிரை உறைய வைக்கும் விபத்து! காரில் சென்றவருக்கு காற்றில் வந்த ஆபத்து!

காற்றில் பறந்து வந்த உலோகத் தகடு ஒருவரின் உயிரை பறித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் ஏப்ரல் 26ம் தேதியன்று, சீனாவின் வடமேற்கே உள்ள சான்ஷி மாகாணத்தில்  நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஸி அண்ட் ஆன் ரிங் எக்ஸ்பிரஸ்வே பகுதியில், கருப்பு நிற செடான் ரக காரில் ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, திடீரென எதிர்பாராவிதமாக, உலோகத் தகடு ஒன்று காற்றில் பறந்து வந்து அவரது கார் மீது விழுந்தது. அதில், அந்த காரின் கண்ணாடி நொறுங்கி உள்ளே இருந்த நபர் உயிரிழந்தார். 

சற்று முன் அதே வழியாகச் சென்ற சரக்கு லாரியில் இருந்து, அந்த உலோகத் தகடு கீழே விழுந்ததாகவும், அதனை யாரும் அப்புறப்படுத்தாததே இந்த விபத்து ஏற்பட காரணம் எனவும், வாகன ஓட்டிகள் சோகத்துடன் குறிப்பிட்டனர். தற்போது இவ்விபத்து காட்சிகள், சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.