பெற்ற தாயை வீட்டில் தனி அறையில் பூட்டி கதற கதற மகன் அரங்கேற்றிய கொடூரம்! அதிர வைக்கும் சம்பவம்!

பெற்ற தாய் என்றும் பாராமல், பட்டினி போட்டு கொடுமை செய்த நபர் பற்றிய செய்தி வைரலாகி வருகிறது.


மேற்கு வங்கம் மாநிலம், பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள நார்த் கோபிந்தபுர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணியை, அவரது மகன் வீட்டிலேயே பட்டினி போட்டு கொடுமை செய்து வந்திருக்கிறார். இதுபற்றி ஐபிடி ஊடகம் வெளியிட்ட செய்தியில், ''பாரம்பரிய சொத்தை, தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி கேட்டு, தாயை பட்டினி போட்டு, அந்த நபர் அடித்து உதைத்து வந்திருக்கிறார்.

தனி அறையில் தாயை அடைத்து வைத்த மகன் அவரை வெளியே அனுமதிப்பதில்லை. அந்த அறைக்குள் உணவு எதுவும் கொடுப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மறை மட்டும் ஒரே ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்துள்ளான். இதனால் அந்த தாய் பசியால் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்மணியை  பத்திரமாக மீட்டுள்ளனர். மருமகள் குடும்பத்தினரின் அறிவுறுத்தலை கேட்டு, தனது மகன் தன்னை கொடுமை செய்வதாக, அந்த பெண்மணி குறிப்பிடுகிறார். ஆனால், கொடுமை செய்த நபரோ இதனை மறுத்துவிட்டார், '' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது தாயை வீட்டை விட்டு துரத்தவில்லை என்றும், அவரே விருப்பத்தின் பேரில் வெளியே சென்றுவிட்டார் என்றும், அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், போலீஸ் தரப்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.