உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக பிணவறைக்கு அனுப்பிய டாக்டர்கள்! பிறகு நடந்த அதிசயம்!

மத்திய பிரதேசத்தில் ரோட்டில் மயக்க நிலையில் இருந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்,


மருத்துவமனை  ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி பிணவறையில் இரவு முழுவதும் வைத்துள்ளனர். பின்னர் காலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை பரிசோதித்த போது மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது அப்போதுதான் அவர் உயிருடன் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.

மத்திய பிரதேசத்தில் காசிராம் 72, என்ற முதியவர் அரை மயக்க நிலையில் ரோட்டில் அனாதையாக படுத்து கிடந்துள்ளார், அப்போது அந்த வழியாக வந்த மக்கள் அவரை அருகில் உள்ள பனா சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் என்பதால் மருத்துவமனை ஊழியர்கள் போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் காசிராம் இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர் இதையடுத்து போலீசாருக்கு சுமார் 9 மணி அளவில் காசிராம் என்பவர் இறந்து விட்டதாக போலீசாருக்கு அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் பிரேத பரிசோதனைக்காக காசிராமின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சு இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். இதையடுத்து உடனே  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் காலை 10.20  மணி அளவில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் காசிராமன் உயிர் பரிதாபமாக போய்விட்டது ,என மருத்துவ மனையின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரோஷன் என்பவர் இந்த தவறுக்கு காரணமாக இருந்த அனைத்து மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.