நான் தான உன்னை கல்யாணம் பண்ணப்போறேன்..! வாக்கு கொடுத்த விஜய்! நம்பி முந்தி விரித்த 19 வயது பெண் கர்ப்பிணி ஆன பரிதாபம்!

கூடலூர்: திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கூடலூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவருடன் கூடலூர், கீழ்நாடுகாணி பகுதியை சேர்ந்த விஜய் (22 வயது) என்பவர் நெருங்கிப் பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறிய  விஜய், பல முறை அந்த பெண்ணை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகக் கூறப்படுகிறது.  

இந்த விசயம் வெளியில் தெரியும் முன்பாக, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி இளம்பெண், விஜயை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அந்த நபர் மறுத்துவிட்டாராம். மன உளைச்சல் அடைந்த இளம்பெண்,  தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை பார்த்த அவரது பெற்றோர், உடனடியாக, சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டிற்குச் சென்று , அவரது பெற்றோர், உறவினரிடம் திருமணம் செய்துவைக்க கோரியுள்ளனர்.  

ஆனால், இளைஞரின் குடும்பத்தினர், பெண் வீட்டாரை மிகவும் தரக்குறைவாக பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், குறிப்பிட்ட இளைஞர் விஜய், அவரது தாய் விஜயலலிதா, சித்தப்பா ராஜன் ஆகியோரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.