திருமணத்தில் கள்ளக்காதலியுடன் நடனம்! தட்டிக் கேட்ட மனைவிக்கு கோடாரியால் வெட்டு! பிறகு நேர்ந்த பயங்கரம்!

திருமண விழா ஒன்றில் வேறு பெண்ணுடன் நடனமாடிய கணவனை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் கோடாரியால் வெட்டிக்கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.


உதய்ப்பூரைச் சேர்ந்தவர் காஷுராம். கடந்த வெள்ளிக்கிழமை இவர் தனது மனைவி பிகாலியுடன் பக்கத்து வீட்டுக்காரர்கள் இல்லத் திருமணத்துக்குச் சென்றார். அங்கு காஷுராம் வேறொரு பெண்ணுடன் நடனமாடியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த பெண்ணுடன் ராம் தகாத உறவில் இருப்பதாக ஒரு புகார் உண்டு.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி பிகாலி வீடு திரும்பியதும் தனது கணவனிடம் அது குறித்து கேட்டு சண்டையிட்டார். வாக்குவாதம் முற்றி சூடுபிடித்ததையடுத்து கோடாரி ஒன்றை எடுத்த காஷுராம் மனைவி பிகாலியை சரமாரியாக வெட்ட இதில் பிகாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காஷுராமின் முதல் மனைவியின் மகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காஷுராமை கைது செய்தனர்.

அதேபோன்று மும்பை அருகே குழந்தை பெற்றுக்கொள்ள ஒத்துழைக்க மறுத்த மனைவியை கழுத்தை நெறித்துக்கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். அண்டாப் ஹில்ஸ் அருகே உள்ள ராவல் கேம்ப் என்ற இடத்தைச் சேர்ந்த தம்பதி நரேஷ் சபர்வால் - சுப்ரியா தம்பதி. தன் மனைவி தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டு படுக்கையறைக் கதவை உட்புறமாகப் பூட்டிக் கொண்டதாகவும் நெடுநேரம் கதவைத் திறக்காததால் கதவை உடைத்துத் திறந்த போது தனது மனைவி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், காவல் நிலையத்தில் நரேஷ் அளித்த தகவலின் பேரில் போலீசார் விபத்து மரணம் என பதிவு செய்தனர். 

ஆனால் உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் சுப்ரியாவின் கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளம் இல்லாததோடு கழுத்தை நெறிபட்டு இறந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நரேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஒத்துழைக்க மனைவி மறுத்ததால் வாக்குவாதம் முற்றி கழுத்தை நெறித்துக்கொன்றதாக் ஒப்புக்கொண்ட நரேஷை போலீசார் கைது செய்தனர்.