அண்ணன் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் அணுகிய மைத்துனர்! ஒத்துழைக்க மறுத்ததால் பிறகு நேர்ந்த கொடூரம்!

ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பாட்டியைச் சேர்ந்தவர்கள் தேவராஜ் - அன்னக்கொடி தம்பதி இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.


இந்நிலையில் தேவராஜின் தம்பியான சரவண அன்னக் கொடியிடம் தனது தவறான விருப்பத்தை தொடர்ந்து அண்ணியிடம்  தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அன்னக் கொடி தனது கணவர் தேவராஜிடம் தெரிவிக்கவே அவர் தனது தம்பி சரவணனைக் கண்டித்தார்.

மேலும் தேவராஜ தனது மனைவி அன்னக் கொடியை தனது மாமியார் வீட்டுக்க்கு அனுப்பிவைத்தார். இதையடுத்து தாய்வீட்டில் இருந்தபடி அன்னக்கொடி கள்ளிப் பட்டியை அடுத்த வரப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

இதை அறிந்த சரவணன், சம்பவத்தன்று மாலை வரப்பள்ளம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக அந்த பேருந்து நிறுத்தத்துக்கு வந்த அன்னக்கொடியிடம் சரவணன் தகராறில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தான் மறைத்து வைத்திருந்து சூரிக்கத்தியால் வயிறு, மார்பு தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியதில் அன்னக்கொடி ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். மேலும் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்ட சரணன் இருசக்கரவாகனத்தில் தப்பிச் சென்றார்.

அன்னக்கொடிக்கு கோபி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். சரவணனும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.