எனக்கு எய்ட்ஸ் இருக்கு? உங்கள் மகளுக்கும் வேணுமா? திருமண வீட்டில் பெண் வீட்டாரை அதிர வைத்த மாப்பிள்ளை!

பெங்களூருவில் தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என பொய் சொல்லி திருமணத்தை நிறுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.


பொதுவாக ஒருவருக்கு திருமணம் பிடிக்க வில்லை என்றால் அதற்கு என்ன காரணம் சொன்னால் நம்புவார்கள் என யோசிப்பார்கள். சிலர் உண்மையை சொல்லியும் திருமண பந்தத்தில் இருந்து தப்பிப்பர். சில பெற்றோர் பிள்ளைகளின் விருப்பத்தை முழுமையாக அறியாமல் அப்படியே தெரிந்து கொண்டாலும் அதற்கு சம்மதிக்காமல் திருமணம் செய்து வைப்பர். இதனால் அந்த வாழ்க்கை கசப்பில் போய் முடிந்துவிடுகிறது. 

இந்நிலையில் தனக்கு விருப்பம் இல்லாமல் நடைபெறும் திருமணத்தை நிறுத்த நினைத்த கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்த கிரண் குமார் தன்னுடைய பெயருக்கு களங்கம் வந்தாலும் பரவா இல்லை என, பெண் வீட்டாருக்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது. என்னை உங்கள் வீட்டு பெண் திருமணம் செய்து கொண்டால் அவளுக்குத்தான் பாதிப்பு என்று சொல்லி விட்டார்.

திருமணம் நடைபெற இருந்த ஒரு சில நாளில் அவர் இப்படி சொன்னது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. பெண் பார்க்கும்போதே சொல்லி இருந்தாலே எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்திருக்கலாமே என புலம்பினர்.

இது குறித்து இரு வீட்டாரிடையே பிரச்சனை வெடிக்க அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று எச்.ஐ.வி பரிசோதனை செய்தனர். அப்போதுதான் அவர் கூறியது பொய் என அனைவருக்கும் தெரிந்தது. விருப்பம் இல்லையென்றால் அதை சொல்லாமல், பொய் சொல்லி நிறுத்தியதால் பெண் வீட்டாருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து கிரண்குமார் மீது புகார் அளிக்க மணமேடையில் நடக்க வேண்டிய கிரண்குமார், ஜெயில் மேடையில் அமர்ந்திருக்கிறார்.

ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்தலாம். ஒரு பொய் சொல்வதால் ஆயிரம் திருமணங்கள் நின்று போய் உள்ளது. இது ஆயிரத்தில் ஒன்னு.