திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திய வழக்கில் இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
காதல்..காமம்..மயக்கம்..! 24 வயது இளைஞனால் பிளஸ் 2 மாணவிக்கு நேர்ந்த விபரீத அனுபவம்..! கதறும் பெற்றோர்..!
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ராயபுரத்தில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார் ராமன் என்பவர். விழுப்புரத்தை சேர்ந்த ராமன் ராயபுரத்தில் தங்கி வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மாணவி அடிக்கடி ராமனுடன் சுற்றித் திரிந்துள்ளார். மாணவியை காதலிப்பதாக கூறி சென்னையில் பல இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி மாணவி திடீரென மாயம் ஆனார். பலஇடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதற்கிடையே ராமன் என்பவருடன் சுற்றித் திரிந்ததாக அக்கம் பக்கத்தினர் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அப்போதுதான் 3 வருடங்களாக அந்த இளைஞருடன் மாணவி சுற்றித் திரிந்தது பெற்றோருக்கு தெரியும்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தேடிவந்த நிலையில் ராமன்தான் மாணவியை அழைத்து சென்றதை உறுதி செய்தனர். பின்னர் 2 பேரையும் மீட்ட காவல்துறையினர் திவிர விசாரணை மேற்கொண்டனர். வெளியூருக்கு சென்று ஜாலியாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றதாக இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்தது காவல்துறை. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.