கட்டிய மனைவியின் ஆபாச படங்களை வெளியிட்ட விபரீத கணவன்! அதிர வைக்கும் காரணம்!

தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து இணையதளத்தில் வெளியிட்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


ரவீந்தர் என்ற நபர் துர்க்கயம்ஜல் நகரில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றிய போது அங்கு செவிலியராக பணியாற்றிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது பின்னர் அந்தப் பெண் வேறு மருத்துவமனைக்கு மாற்றலாகிச் சென்ற போது ரவீந்தர் பின்தொடர்ந்து பழக்கத்தை வளர்த்துக்  கொண்டார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் - எல்.பி.நகரில் வாழத் தொடங்கினர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரவீந்தரின் ஃபேஸ்புக் பக்கங்களை ஆய்வுசெய்த அவரது மனைவி ரவீந்தருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டார் அது குறித்து கேட்டு அந்தப் பெண் சண்டையிட்டபோது வாக்குவாதம் முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விரக்தி அடைந்த ரவீந்தர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் எனினும் மனைவியை பழிவாங்கும் நோக்கம் அந்த நபருக்கு குறையவில்லை தனது மனைவியின் பெயரில் போலியாக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கிய அவர் தனது மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அதில் வெளியிட்டார் மேலும் அதில் தனது மனைவி பதிவிட்டதைப் போல ஆபாச பதிவுகளை வெளியிட்டார் 

இது குறித்து சில மாதத்துக்குப் பிறகே தெரிய வந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல் துறையில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ரவீந்தர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் இதே பெண் ஏற்கனவே ரவீந்தர் மீது மற்றொரு காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்து இருந்ததும் தெரிய வந்தது.