காதலியின் தந்தைக்கு சதக் சதக்! காதலன் வெறிச் செயல்! பரபரப்பு காரணம்! தாம்பரம் திகுதிகு!

சென்னை தாம்பரம் அருகே காதலி தன்னுடன் பேசாததால் அவரது தந்தையை கத்தியால் குத்திய லோடு ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்


சென்னையை அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்  தாம்பரத்தில் லோடு ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இதேபோன்று தாம்பரத்தில் ரோடு காலத்தை ஓட்டி வரும் சதீஷ் என்ற 19 வயது இளைஞன் லோகநாதனின் மகள் சரண்யாவை 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அண்மைக்காலமாக சதீஷுடன் பேச மறுத்த சரண்யா இதற்குப் பின் தன்னுடன் பேச வேண்டாம் எனக் கூறி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த லோகநாதனை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் லோகநாதனை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சதீஷை தேடிவந்த போலீசார் பேருந்து நிலையம் ஒன்றில் கைது செய்தனர்.

சதீஷிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தனது பதினைந்தாம் வயதில் தான் சரண்யாவை திருமணம் செய்ய விரும்பி தனது தந்தையை சரண்யாவின் வீட்டிற்கு பெண் கேட்க அனுப்பி வைத்ததாகவும், ஆனால் உரிய வயது வரவில்லை எனக்கூறி அவரை சரண்யாவின் குடும்பத்தினர் அவமானப்படுத்தி அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தான்.

இதனால் தனது தந்தை அவமானம் தாங்காமல் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்குப் பழி வாங்கவே தான் சரண்யாவின் தந்தையை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தான்.