தினமும் பின்னாடியே வர்றான்..! போட்டோ எடுத்தான்..! இப்போ மிரட்டுறான்..! கோவை இளம் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீத அனுபவம்!

கோவையில் பெண் ஒருவரை தினமும் பின்தொடர்ந்து போட்டோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.


கோவை ராமநாதபுரத்தை பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் காலை வேலைக்கு செல்லும்போது மணிகண்டன் என்பவர் பின்தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அவரை பலமுறை மறைமுகமாக தனது செல்போனில் போட்டோவும் எடுத்துள்ளார்.  

பின்னர் அந்த பெண்ணிடம் சென்று போட்டோக்களை அவதூறாக சித்தரித்து சமூகவலைதளங்களில் போட்டுவிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்த பெண் தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகள் வேலைக்கு செல்லும்போது கண்காணித்த அவரது தந்தை மணிகன்டன் அன்றும் வந்து பேச்சுக் கொடுத்ததை பார்த்துள்ளார்.

இதை அடுத்து மணிகண்டனை பார்த்து எதற்காக என்னுடைய மகளை பின்தொடர்ந்து போட்டோ எடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் பெண்ணின் தந்தைக்கும் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியையின் தந்தை ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.