பீச்சில் நீச்சல் உடையில் சூரியக் குளியல்! இளம் பெண்ணின் அந்த உறுப்பை தடவிய இளைஞன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

துபாய் நாட்டின் கடற்கரை ஒன்றில் ஓய்வாகப் படுத்திருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணின் தொடையை தடவிய நபர் கைது செய்யப்பட்டார்.


எகிப்து நாட்டைச் சேர்ந்த  ஒரு ஆண், துபாயில் கார்பெண்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் இவர் உம் சுகிம் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயது பெண், தனது தோழிகளுடன் நீச்சல் செய்துள்ளார்.

பின்னர், ஓய்வாக கடற்கரையில் அவர் படுத்திருந்துள்ளார். அப்போது, குறிப்பிட்ட நபர், அந்த பெண்ணின் தொடை, முதுகுப் பகுதியை தடவியுள்ளார். 

இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்யவே, அவர்கள் அவரை கைது செய்தனர். கடற்கரையில் விளையாடியபோது பந்து அந்த பெண்ணின் மேல் விழுந்ததால், அதனை எடுக்கச் சென்றபோது, எதிர்பாராவிதமாக, கை பட்டுவிட்டதாக, அந்த ஆண் முதலில் கூறியுள்ளார்.

இருந்தாலும், போலீசார் தீவிரமாக விசாரித்தபின், தனது தவறை அவர் ஒப்புக் கொண்டார். தற்போது இதன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடையை தடவியதற்கே துபாயில் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள். ஆனால், நம்மூரில் பலாத்காரம் செய்த பல குற்றவாளிகள் சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாட சட்டம் உதவி செய்வது வேதனையாக உள்ளது...