கருநாகப் பாம்பை கையில் பிடித்து இளைஞர் செய்த செயல்! முகத்தில் சிறிதும் பயம் இல்லாமல் அரங்கேறிய பகீர் சம்பவம்!

சென்னை: கருநாகத்திற்கு சோப்பு போட்டு இளைஞர் ஒருவர் குளிப்பாட்டி விடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


இதன்படி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என, விவரம் தெரியவில்லை.

அதில் இளைஞர் ஒருவர், கருநாக பாம்பிற்கு, தண்ணீர் ஊற்றி, உடலை தேய்த்துவிட்டு, சோப்பு போட்டு தேய்த்துவிட்டு, பிறகு, பாம்பை அப்படியே எடுத்து  அருகில் உள்ள பக்கெட் நீரை ஊற்றி குளிப்பாட்டுவதைக் காண முடிகிறது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் எனச் சொல்லப்படும் சூழலில், இந்த இளைஞர் எந்த அச்சமும் இன்றி பாம்பை குளிப்பாட்டுவதும், அதற்கு அந்த பாம்பு முழு ஒத்துழைப்பு தருவதும் பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது.