மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் அது குறித்து தனது மாமனார் - மாமியாரிடம் புகார் அளித்த நிலையில் அவர்கள் அது குறித்து விசாரிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்களை கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
மனைவிக்கு தகாத உறவு! மாமியாருக்கு மருமகனால் நேர்ந்த பயங்கரம்!

பீகாரைச் சேர்ந்த மாண்ட்டுகுப்தா என்ற நபர் உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள காங்கி பஜாரில் வசிக்கும் தனது மாமனார் சங்குர் குப்தா, மாமியார் கிஸ்மதி குப்தா ஆகியோர் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் பேரனான 14 வயது ஆதித்யாவையும் அந்த நபர் குத்தியதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் பீகா மாநிலத்துக்குச் சென்று மாண்ட்டூவை கைது செய்தனர். விசாரணையில் தனது மனைவியின் நடத்தை குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது குறித்து தனது மாமியார் மாமனாரிடம் தெரிவித்தும் அவர்கள் விசாரிக்கத் தவறியதால் அவர்கள் மீது ஆத்திரம் ஏற்பட்டு கொலை செய்ததாகவும், மாண்ட்டூ தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ள்னர்.
இந்நிலையில் தங்களுக்கு 2018-ஆம் ஆண்டு திருமணமான நிலையில் அது முதல் தனது கணவன் தன்னை வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக மாண்ட்டூவின் மனைவி காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.