வங்க மொழி ஒழுங்கா பேசனும்! இல்லனா மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறனும்! மம்தா பகீர் உத்தரவு!

மேற்குவங்கத்தில் வசிப்பவர்கள் கண்டிப்பாக வங்காள மொழியை கற்றே தீரவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.


பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் மருத்துவர்களின் போராட்டத்தை வெளி நபர்கள் தூண்டிவிடுவதாகத் தெரிவித்தார். மருத்துவர்களை காணச் சென்ற போது மாநிலத்துக்கு தொடர்பில்லாத வெளி நபர்களும் கூட்டத்துக்கு நடுவில் முழக்க் எழுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக அவர் கூறினார். 

பா.ஜ.க. மேற்கு வங்க மக்களையும், சிறுபான்மையினரையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், மக்களவைத் தேர்தலில் வாக்கு எந்திரங்கள் ப்ரோகிராம் செய்யபப்ட்டதாகவும், வாக்குச் சீட்டு முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அரைத்த மாவை மீண்டும் ஒரு முறை அரைத்தார்.

எனவே வங்காளிகள் மற்றும் சிறுபான்மையினரின் மனங்க்ளை பா.ஜ.க. வென்றுவிட்டதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வங்கமொழி தெரிந்தவர்களாகவும், வங்கமொழியில் எப்படி பேசுவது என்பதை அறிந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்றார்.