சுய இன்பம் செய்வது தப்பு, உடல் நலத்திற்கு தீங்குனு சொல்வாங்க..! நம்பாதீங்க! ஏன் தெரியுமா?

உடல், மனம் மற்றும் மருத்துவப் பிரச்சினைகள் ஏதும் சுய இன்ப பழக்கத்தினால் ஏற்படாது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் இணை எதிர்க்காத வரையிலோ உங்களது உறவு நிலையில் பிரச்சினை ஏற்படாத வரையிலோ சுய இன்ப பழக்கத்தை தொடரலாம் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


சுய இன்ப பழக்கத்தினால் கண் பார்வை பறிபோகும் அல்லது பார்வைத் திறன் பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு. சுய இன்பத்தினால் முகப்பரு ஏற்படாது. ஆணுறுப்பு சுருங்கிப் போகாது. மனநிலைக் கோளாறுகள் வராது. இதனால் ஆண்மைப் பிரச்சினையோ, அதீத பாலியல் கோளாறுகளோ, புற்றுநோயோ, பால்வினை நோய்களோ ஏற்படாது. இது உங்களது சமூக, உணர்வுப்பூர்வமான வளர்ச்சியை எந்தவிதத்திலும் தடுக்காது. எத்தனை முறை சுய இன்பம் மேற்கொள்ள வேண்டுமென்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. அது சம்பந்தப்பட்டவரைப் பொறுத்தது. 

சுய இன்பத்தை ஆண், பெண் இருபாலருமே பாதுகாப்பாக மேற்கொள்ளும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக, சுய இன்பத்துடன் முரட்டுத்தனம் கலக்கும்போது பலத்த சேதம் உண்டாகும் என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்

சுய இன்பத்துக்கான தேவையை விட அதிகளவில் ஈடுபட்டால், தங்களது கடமைகளை மறந்துபோகும் நிலைக்கு ஒருவரைத் தள்ளும். தினசரிப் பொறுப்புகள், உறவுகள் போன்றவற்றில் இருந்து விலக செய்யும். அந்த நிலையை அடையும்போது மன பாதிப்புகள் மட்டுமல்லாமல் உடலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகும்.

ஆண்களைப் பொறுத்தவரை விந்து வெளியேறுதலுக்குப் பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாவதால் அதிகமாகக் களைப்படைவது இயல்பு. தொடர்ச்சியாக சுய இன்பம் மேற்கொள்ளும் பழக்கத்தை கைக்கொள்வதால் செக்ஸின் போது உச்சகட்டம் அடைவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. 

அதிகமாக சுய இன்பம் மேற்கொள்வதால் ஆணுறுப்பு பலவீனமாகும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.