ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே டாய்லட் தான்..! மரண அவஸ்தையில் இளம் மாணவிகள்! எங்கு தெரியுமா?

பள்ளியில் உள்ள ஒரே கழிவறையை, மாணவிகளும் மாணவர்களும் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதையே புறக்கணித்த அவலம் பாட்னாவில் நடந்துள்ளது.


பீகார் மாநிலம் பாட்னாவில் 1950 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சகோதரி சுந்தரி தேவியால் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் அருகே பஜார் சமிதி சாலையில் பாபு ஸ்மரக் பெண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பழங்கால கட்டிடம் என்பதால் சேதம் அடைந்ததால் இங்கிருந்த பள்ளி கடந்த 2012 ல் ராஜேந்திர நகரில் உள்ள அரசு சிறுவர் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் அங்கு மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனிடையே இந்த பள்ளியில் உள்ள சில மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வந்தார்கள். காரணம் மாணவிகளுக்கு என்று தனி கழிப்பிட வசதி கிடையாது. அருகில் உள்ள ஆண்கள் பள்ளி மாணவர்களும், மாணவர்களுடனும், பாதுகாப்புப் வீரர்களும் அந்த கழிவறையை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரே வளாகத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆண்கள் உயர்நிலைப்பள்ளி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் பள்ளியில் பெண்களுக்கென கழிவறை இல்லாததால் பெரும்பாலான மாணவிகள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.