ஆண்கள் ஒரு இரவில் எத்தனை முறை தாம்பத்ய உறவு கொள்ள முடியும்? உங்களுக்கு தெரியுமா?

உடலுறவு தொடர்பான சந்தேகங்கள். வெளிப்படையாக கேட்க வெட்கப்பட்டு அவதிப்படுபவர்கள் உலகம்முழுவதும் ஏராளமானோர். இந்த விஷயத்தை கேட்டால் நம்மை தப்பாக நினைப்பார்களோ என்று தயக்கப்பட்டுக் கொண்டே அந்தவிஷயத்தில் முழு திருப்தி அடையாதவர்கள் எக்கச்சக்கம். அதுபோன்றவர்களின் சந்தேகத்தை தீர்க்கத்தான் இந்த ஸ்பெஷல் கட்டுரை எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்?


உடலுறவு கொள்ளும் சமயங்களில் அடுத்தடுத்து உடனடியாக பெண்கள் மட்டுமே தயாராக முடியும் என்றும் ஆண்களுக்கு அப்படி ஈடுபட முடியாது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரே இரவில் எத்தனைமுறை ஆண்களால் உடலுறவு கொள்ள முடியும் என்பதையும் எவ்வளவு இடைவெளி எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் பாடிரப்போம்.  

உடலுறவுல் உச்சக் கட்டத்தை அடைந்த பின், அடுத்த உறவுக்கு உடனடியாக தயாராவது ஆண்களுக்கு எப்போதுமே இருக்கும் பிரச்சனை. பெண்கள் உச்சக் கட்டத்தை அடைந்த உடனே அடுத்தச் சுற்றுக்கு தயாராகி விடுவார்கள். ஏனெனில் அது இயற்கை அமைப்பே அப்படித்தான். ஆனால் ஆண்களுக்கு அது எளிதான காரியமல்ல. இயற்கையாகவே ஆண்களின் உயிரியல் அமைப்பே அப்படித்தான அமைந்து உள்ளது.

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பின்பும் உடல் தன்னை மீட்டெடுக்கும் நேரம் பெண்ணுக்கும் ஆணுக்கும் மாறுபடுகிறது. ஒருவர் பாலுறவின் உச்சத்தை தொட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து பாலியல் களைப்பு வேளை தொடங்கி விடுகிறது. உச்சக் கட்டத்திற்கும் மீண்டும் பாலியல் கிளர்ச்சி அடைவதற்கும் இடைப்பட்ட நேரத்தை இயல்பு நிலைக்கு திரும்புதல் என்பார்கள்.

பாலுறவில் பெண்களுக்கு பல உச்சக்கட்ட நிலைகள் இருக்கிறது. பாலியல் களைப்பு ஆண்கள் அளவுக்கு நீண்டதாக இருப்பதில்லை. ஆண்களுக்கு விந்து வெளியேறும் நேரத்தில் இருந்து சில நிமிடங்கள் முதல் நாள் கணக்கில் கூட பாலியல் களைப்பு நீடிக்கலாம். முதலில் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பாலியல் களைப்பை பாதிப்பதற்கான காரணங்கள் மது பழக்கம், நுனித்தோல் நீக்கம், நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள், தனிப்பட்ட மனிதனின் உணர்வுப் பூர்வமான திருப்தி ஆகியவை ஆகும்.

ஒருமுறை பாலுறவு கொண்ட பின்னர், மறுபடியும் உறவில் ஈடுபட முடியாததை ஆண்கள் பாதிப்பாக கருதுகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால், ஆண் உடலுக்கான பொதுவான சில உடல் ரீதியான காரணங்களாலேயே இந்த களைப்பு ஏற்படுகிறது. விந்து வெளிப்பட்டவுடன், ஆணின் உடல் அதிக வேலையின் நிமித்தம் சோர்வடைவதை போல் தளர்வடைகிறது. பரிவு நரம்பு மண்டலம் உடலை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது.

 பரிவு நரம்பு மண்டலம், சில நியூரோடிரான்ஸ் மிட்டர் என்னும் நரம்பிய கடத்திகளை தூண்டி, ஆண்குறி விறைப்புக்கு காரணமாகும் தசைகளை தளர்த்துகிறது. உடலின் ஆரோக்கியம், பாலியல் வேட்கை மற்றும் உணவு ஆகியவை ஆணின் பாலியல் களைப்பு காலத்தை தீர்மானிப்பதிலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் மைய பங்கு வகிக்கின்றன.

வெவ்வேறு நபர்களுக்கு இக்கால அளவு வித்தியாசமாக இருக்கிறது. பதின்ம வயது இளைஞனுக்கு பாலியல் களைப்பு சில நிமிடங்களே நீடிக்கும். 30 வயதான ஆண் என்றால் மீண்டும் கிளர்ச்சியுறுவது சற்று கடினம். 50 மற்றும் அதற்கு மேல் வயது உடையவர்கள் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே உச்சக்கட்டத்தை அடைய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாலியல் களைப்பு நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணத்தில் ஒன்று வயது. வயதை பொறுத்து ஒருவர் மறுபடியும் பாலியல் கிளர்ச்சியுறுவதற்கு 12 முதல் 24 மணி நேரம் ஆகும். 40 வயதில் முக்கியமான மாற்றம் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பாலியல் செயல்பாடு, கிளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை பாலியல் களைப்பு நேரத்தை பாதிக்கும் காரணங்கள் ஆகும். இந்த 3 விஷயங்களையும் மேம்படுத்தினால் பாலியல் களைப்பு நீடிக்கும் நேரத்தை குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாலியல் செயல்பாடு உடலுறவு கொள்ளும் முன்பு மது அருந்துவதை தவிர்ப்பது, விறைப்பு தன்மையில் குறைபாடு இருந்தாலோ, வேறு ஏதாவது மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிப்பது, இடுப்புப் பகுதியை பலப்படுத்தும் கூபக உடற்பயிற்சிகள் செய்வது ஆகியவற்றின் மூலம் பாலியல் செயல்பாட்டினை அதிகரிக்கலாம்.

பாலியல் கிளர்ச்சி புதிய நிலைகளில் உடலுறவு கொள்ளுதல், உடலுறவு கொள்ளும் முன்பு சுய புணர்ச்சி செய்யாமலிருத்தல், உடலுறவுக்கு இடையேயான நேரத்தை மாற்றியமைத்தல், இணையோடு சேர்ந்து புதிய முறைகளை செய்து பார்த்தல் ஆகியவற்றின் மூலம் கிளர்ச்சியை தூண்டலாம். சுறுசுறுப்பாக செயல்படுதல் மற்றும் ஆரோக்கியமான உணவு பொருள்களை சாப்பிடுதல் ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.