தூத்துக்குடியில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அதிபர் - அவர் ஒரு மரண வியாபாரி என்பது தெரியுமா?

மாலத்தீவு துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூர், வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது.


31 வயதில் அவர் மாலத்தீவின் துணை அதிபராக இருந்தநேரம். 2015 செப்டம்பர் 8ம் தேதி மாலத்தீவு அதிபர் யாமின் அப்துல் கையூம்,அவரது மனைவியுடன் பயணம் செய்த உல்லாசப் படகில் குண்டு வெடித்தது. யாமின் தப்பிவிட்டார்.அவரது மனைவியும் படகில் இருந்த மற்ற சிலரும் காயமடைந்து இந்தியாவில் சிகிச்சை பெற்றனர்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அடைந்தார்.

இது தவிர ஒரு எம்.பி,ரில்லிவன் ஆடம் என்கிற ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட பலர் சாவுகளுக்கு அகமது அதீப்பே காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.மாலத்தீவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்குகளில் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அப்துல் அதீப் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.கடந்த ஜூன் 14ம் தேதி அரசு அனுமதி பெற்று புனேவில் கண்சிகித்சை செய்து கொண்டு ஜூலை 7ம் தேதிதான் மாலத்தீவு சென்றிருக்கிறார்.

இப்போது மாலத்தீவு வீட்டுக்காவலில் இருந்து தப்பும் முயற்சியில் ஜி.பி.எஸ் கருவியால் பிடிபட்டு தூத்துக்குடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.ஆம்,இத்தனை பெரிய வில்லன் பிடிபட்டது காமெடி சம்பவமாகிவிட்டது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு போகும் விர்கோ 9 என்கிற கப்பலில் வைத்துத்தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தக்கப்பல் மாலத்தீவுக்காரர் ஒருவருக்குச் சொந்தமானது.

கருங்கல்லை இறக்கிவிட்டு திரும்பும் போது கப்பல் திசைமாறுவதை கப்பல் உரிமையாளருக்கு ஜிபிஎஸ் கருவி காட்டிக் கொடுக்க அவர் தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்துவிட்டாத்.அந்தக் கப்பலில் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த விவின் குனாவன் என்கிற மாஸ்ட்டரும்( காப்ட்டன்) ஏழு இந்தோனேசிய ஊழியர்களும் தூத்துக்குடியைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ உட்பட 9 பேர்தான் இருப்பதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.ஆனால் விர்கோ 9 ஐ கடலோர காவல்படை வழிமறித்து சோதனை இட்ட போது அதில் 10 பேர் இருந்துள்ளனர்.

அந்த பத்தாவது ஆள்தான் அப்துல் அதீப்!.மாலித் துறைமுகம் முழுவதும் சிசிடிவி காமிராக்களால் கண்காணிக்கப் படுவதால் அப்துல் அதீப் வீட்டு காவலில் இருந்து தப்பி படகில் வந்து நடுக்கடலில்தான் விர்கோவில் ஏறி இருக்க வேண்டும்.அதற்காகத்தான் கப்பல் வழக்கமான பாதையை விட்டு வில்கி பயணித்து இருக்கிறது என்பது தெளிவானதால்,இதில் ஊழியர்களின் பங்கு என்ன,அப்துல் அதீப்பின் திட்டம் என்ன என்று விசாரித்து வருகிறார்கள். குடியுரிமை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகுதான் அவர் இந்தியச் சிறையில் அடைக்கப் படுவாரா,மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்கப் படுவாரா என்பது தெரியவரும்.