கல்யாணம் ஆன 6 மாதத்தில் மனைவி கர்ப்பம்! அதிர்ச்சியில் மலேசிய அரசர் எடுத்த பகீர் முடிவு!

திருமணமான 6 மாதத்தில் குழந்தை; மாடல் அழகி மனைவியை விவாகரத்து செய்த மன்னர்


மலேஷிய மன்னரை திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி 6 மாதத்தில் குழந்தை பெற்ற நிலையில் அந்தப் பெண்ணை அவர் விவாகரத்து செய்தார். அழகிகளின்  கடை விழிப் பார்வையில் சாம்ராஜ்யங்கள் சரிந்ததாக வரலாறூ உண்டு

அந்த வரிசையில் மற்றுமொரு உதாரணமாகிப் போனவர் மலேஷியாவின் 15-வது அரசராக இருந்த 5-ஆம் சுல்தான் முகமது. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி ரஷ்யாவின் முன்னாள் மாடல் அழகி ஒக்சானா வியோடினாவை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இந்தத் திருமணம் ரகசியமாக நடந்த நிலையில், வெளி உலகுக்கு தெரியும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் ரஷ்யாவில் மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில் ஒக்சானா கருவுற்றிருந்த போது அவர் ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுத்த நிலையில் நெருக்கமாக இருக்கும் இருக்கும் வீடியோ ரஷ்ய ஊடகங்களில் பரவியது. இதனைப் பார்த்த சுல்தான்  முகமது ஆத்திரம் அடைந்து ஒக்சானாவை விவாகரத்து செய்தார். மேலும் அரச மரபை மீறியதாக நினைத்து பதவியை ராஜினாமா செய்த அவர் முன்னாள் மன்னராகிப் போனார்.