ரயில் டிக்கெட் முன்பதிவு விண்ணப்பம்! தமிழுக்கு கெட் அவுட்! மலையாளத்துக்கு கட் அவுட்! திருச்சி டென்சன்!

திருச்சி ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான படிவத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம் இடம் பெற்றிருந்ததால் படிவத்தை நிரப்ப பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


பொதுவாக அனைத்து ரயில் நிலையத்திலும் உள்ள டிக்கெட் முன்பதிவு படிவத்தில் ரயில்வே துறையின் பொது மொழியான இந்தி மற்றும் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலத்தின் மொழி இடம்பெற்று இருக்கும். இந்நிலையில் திருச்சி ரயில்வே நிலையத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம் மொழி உள்ள படிவம் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அதைப்பார்த்த பயணிகள் படிவத்தை நிரப்புவதற்கு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் மட்டுமே தெரிந்த பயணிகள் படிவத்தை நிரப்ப முடியாமல் போனதற்காக மற்றொரு பயணியை நாடவேண்டிய நிலை திருச்சி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்து ரயில்வே துறையில் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அதை விசாரித்த ரயில்வே அதிகாரி கேரளா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய படிவம் மாறி திருச்சிக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பயணிகளுக்கு தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட படிவம் வினியோகிக்கப்பட்டது.