படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி சரிந்த பிரபல நடிகை! பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி!

நடிகை ரஜிஷா விஜயன் மலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகை ஆவார்.


சமீபத்தில் Kattappana என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  இந்த படத்தின் கதையானது சைக்கிள் வீராங்கனை ஒருவரது வாழ்க்கை எப்படி பயணமாகிறது என்பதை காட்டுகிறது. இதில் சைக்கிள் வீராங்கனையாக ரஜிஷா நடித்து வருகிறார்.

தருன் இந்த படத்தை இயக்கி வருகிறார் மற்றும் மணியன்பிள்ளை தயாரித்து வருகின்றார்.  இந்த படத்தின் சூட்டிங்கின் போது சைக்கிளில் பயிற்சி செய்து கொண்டிருந்தார் ரஜிஷா அப்போது அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் .

இதனை பார்த்த படக்குழு உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். காரணம் அவரது உடலில் தண்ணீரின் அளவு மிக குறைவாக இருந்தது.

பின்னர் மருத்துவர்கள் இவரை ஒரு வாரம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சரியான ஓய்வு இல்லாமல் அவர் படங்களில் நடித்து வருவதால் இந்த மயக்கம் அவருக்கு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.