நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம்..! கை விரித்த நீதிமன்றம்! நடிகருக்கு அதிகரிக்கும் சிக்கல்..!

எர்ணாகுளம்: குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நடிகர் திலீப் பெயரை நீக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.


மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் திலீப். இவர், நடிகை பாவனாவுடன் ஏற்பட்ட  தனிப்பட்ட பிரச்னைக்காக அவரை பழிவாங்கும் நோக்கில் ஆள் வைத்து, அவரை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்து, பின்னர் அதனை வீடியோவாக படம்பிடித்து மிரட்டியதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.

இதன்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய கேரள போலீசார், பெரும் போராட்டத்திற்குப் பின் நடிகர் திலீப்பை கைது செய்தனர். அவரைப் போலவே, இந்த வழக்கில் தொடர்புடைய பல்சர் சுனில் உள்ளிட்ட மேலும் சிலரையும் போலீசார் கைதுசெய்திருந்தனர். 

இதில், திலீப் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து சாட்சியங்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, முதலில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்பான வீடியோக்களை பார்வையிட கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இதற்கு, எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கவே, அவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து, அனுமதி பெற்றார்.  

இந்நிலையில், தற்போது, இந்த வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வலியுறுத்தி, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ஆனால், இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கை பொறுத்தவரையிலும் திலீப்தான் மூளையாகச் செயல்பட்டவர் என்பதால், அவரது பெயரை குற்றவாளிகளின் பட்டியலில் இருந்து நீக்குவது இயலாத காரியம் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திலீப் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துவருவதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.