பல விவகாரங்களில் கமுக்கமாக இருந்த மாலன், வைரமுத்து மீது மட்டும் கல்லெறிகிறார்..

வைரமுத்துக்கு எதிராக மாலன் நாராயணனும்,காலச்சுவடு கண்ணனும் செய்வதுதான் பார்ப்பனிய குசும்பு என்று காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார், பத்திரிகையாளர், சாவித்திரி கண்ணன். ?


மாலனை கடந்த முப்பது ஆண்டுகளாக அறிந்தவன் என்ற முறையில் கேட்கிறேன். பெண்கள் விஷயத்தில் வைரமுத்து நடந்து கொண்டது குறித்து அறச் சீற்றம் கொள்ள தனக்குத் தகுதி இருக்கிறதா? என மாலன் தன் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளட்டும்.

வைரமுத்துவின் பாலியல் சீண்டல் தான் உங்கள் கோபத்திற்கு காரணம் என்றால்,அந்தக் கோபம் ஏன் அது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் மற்ற உங்களவாக்களான பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசை மேதைகள் போன்றோர் மீது வரவில்லை? நான் பட்டியல் தரட்டுமா? தாங்குவீர்களா? எவ்வளவு விவகாரங்களைக் கமுக்கமாக அமுக்கிவந்திருக்கிறீர்கள்…!

அவ்வளவு ஏன்? சங்கராச்சாரியார்களான ஜெயேந்திர சரஸ்வதியும், விஜயேந்திரரும் தங்கள் துறவுக்கு புறம்பாக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது குறித்து உங்களுக்கெல்லாம் ஏன் அறச் சீற்றம் வரவில்லை? கொலை குற்றத்தில் கைதாகி,சிறை சென்று, ’அரசியல் லாபி’ செய்து வெளிவந்த ஜெயேந்திரரிடம் இந்து தமிழ்திசை உள்ளிட்ட பிராமணப் பத்திரிகைகள் அனைத்துமே பண்டிகைகளின் போது அருளாசி உரைகளை வாங்கி போட்ட போதெல்லாம் நீங்கள் அமைதி காத்தீர்களே… எப்படி? 

ஒரு கொலைகுற்றவாளியை, ஊர்,உலகறிந்த காமச் சாமியாரை மீண்டும் புனிதராக எந்த கூச்சமும் இல்லாமல் அங்கீகரிக்கும் ஒரு சமுதாயத்தில் வாய்ப் பொத்தி அமைதிகாத்துக் கொண்டு வைரமுத்து மீது கல்லெறிகிறீர்களே..இது எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.