45 வயதிலும் கட்டு குலையா பேரழகு! காரணம் இந்த யோகா தானாம்! சீனியர் நடிகையின் சீக்ரெட்!

பொதுவாக நடிகர் நடிகைகள் என்றாலே அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களை கூட சமூக வலைதளத்தில் பதிவு இடுவதும் அதற்கு அவர்களது ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்வதும் என்பது வழக்கமான ஒன்று தான்.

இந்த வரிசையில் தற்போது சிக்கியுள்ளார், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை மலைக்கா அரோரா.  நடிகை  மலைக்கா எப்போதும் தன்னுடைய உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். அவர் ஜிம்மில் மேற்கொள்ளும் உடற்பயிற்சி விடீயோக்களை சமூக வலைதளத்தில் பதிவு இடுவதை வழக்கமாக கொண்டவர்.

தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  புதியதாக வெளியிட்ட அந்த புகைப்படத்தில் யோகா செய்து கொண்டிருக்கிறார் நடிகை மலைக்கா. மேலும் காப்சனாக , "பிரேக்டிஸ் மேக்ஸ் பெர்பெக்ட்" என்றும் பதிவு இட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர், மலைக்காவின் இந்த முயற்சியை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் மற்றொரு தரப்பினர் எப்போதும் போல மலைக்காவை கிண்டல் செய்து கமெண்ட் செய்து உள்ளனர். 

குறிப்பாக ஒரு சிலர், "இந்த வயதான காலத்தில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் 45 வயதிலும் தான் கட்டழகுடன் இருக்க காரணமே இது போன்ற யோகா தான் என்று கூறி சிரித்துவிட்டு செல்கிறாராம் மலைக்கா.