3 மணி நேரம் லேட்! வழி தவறிச் சென்ற விபரீதம்! கலைந்து சென்ற கட்சியினர்! கமல் பிரச்சார காமெடி!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் முதல் பிரச்சார கூட்டமே செம காமெடியில் முடிந்துள்ளது.


4 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட செம்மஞ்சேரி பிரச்சாரம் 6.45க்கு துவங்கியது. இதனால் அங்கு துவக்கத்தில் இருந்து காத்திருந்த கமல் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். முதல் இடமே லேட் என்பதால்  திட்டமிட்டபடி சோழிங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை கமலால்.

இதனால் கமல் நேராக கண்ணகி நகர் பிரச்சாரத்திற்கு சென்றார். இதனால் சோழிங்கநல்லூரில் கமலுக்காக காத்திருந்த தலையில் அடித்துக் கொண்டு புறப்பட்டனர். அதனை தொடர்ந்து ,  கந்தஞ்சாவடியில் அவர் பிரச்சாரம் செய்வதற்காக மைக் செட் மற்றும் அவருடைய தனிப்பட்ட கேமராக்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கட்சியினர் 10ற்கும் குறைவானவர்களும் சுமார் 25 போலிசாரும் கமலுக்காக காத்திருந்தார்கள்.  ஆனால் கண்ணகிநகரில் இருந்து கந்தஞ்சாவடி செல்லும் வழி மாறி பெருங்குடிக்குள் சென்றுவிட்டார் கமல் . சிறிது நேரத்தில் அங்கு கமல் வராததை கண்டு குழப்பமடைந்த காவல்துறையினரும் ஆவருடைய பிஆர்ஓ டீமும் கமல்  எங்கிருக்கிறார் என கமல் உடன் இருந்தவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர்.

பின்னர் அவர் வழி மாறி சென்றதை அறிந்து கந்தஞ்சாவடியில் இருந்த ஏற்பாட்டை களைத்து அடுத்த இடமான வேளச்சேரிக்கு கமல் கட்சியினர் புறப்பட்டு சென்றனர். கந்தஞ்சாவடியில் கமலுக்காக காத்திருந்த நான்கைந்து பேரும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் கமலின் முதல் நாள் பிரச்சாரமே செம காமெடியாகிவிட்டது.