வயிற்றில் ஆப்பரேசன்! தொண்டையில் சிக்கிய விவகாரமான பொருள்! மருத்துவமனையில் 61 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

லண்டன்: அறுவை சிகிச்சையின்போது முதியவரின் பல்செட் தொண்டையில் சிக்கியதால் பெரும் சிக்கல் நிகழ்ந்துள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜாக். 77 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன்பேரில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்றில் இருந்த கட்டி நீக்கப்பட்டது. ஒரு வாரம் ஓய்வில் இருந்த ஜாக் பின்னர் வீடு திரும்பினார். ஆனால், எதையும் சாப்பிட முடியாமல் கடும் அவதிக்கு ஆளானார். அவருக்கு தொண்டையில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மீண்டும் ஜாக் அதே மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொண்டையில் பல்செட் வடிவில் எதோ சிக்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அறுவை சிகிச்சை செய்தபோது, கவனக்குறைவால் அதை விழுங்கிவிட்டதாக, தெரிவித்திருக்கிறார். பின்னர், நீண்ட நேரம் போராடி, அந்த பல்செட்டை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர்.

பல்செட் பயன்படுத்தும் வழக்கம் உள்ளதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அதனை அப்புறப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சை செய்திருப்போம், அவர் அதைச் சொல்லாததால், 2 முறை தேவையின்றி அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டதாக, பிரிட்டன் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.