கார் உற்பத்தியை நிறுத்தியது மகிந்திரா அன்ட் மஹிந்திரா! ஆலைகளும் மூடப்பட்டன! லட்சக் கணக்கானோரின் வேலை?

ஆட்டோமொபைல் துறையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள தேக்கநிலையை அடுத்து இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 8 முதல் 14 நாட்கள் உற்பத்தியை நிறுத்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.


ஜிஎஸ்டி வரி, பணப் புழக்கத்தில் தடைகள், வட்டிச் செலவினங்கள் உள்ளிட்டவற்றால் மோட்டார்  வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை கடந்த மூன்று மாதங்களில் வெகுவாக குறைந்து விட்டதாக மோட்டார்  வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மோட்டார் வாகன நிறுவனங்களின் பிரதிநிதிகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் விற்பனை தேவை குறைவை ஈடுசெய்யும் வகையில் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையாக ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் 8 முதல் 14 நாட்களுக்கு உற்பத்தி இல்லா தினம் கடைபிடிக்க மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் 73-வது தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

மோட்டார் உற்பத்தி துறையை மீட்க ஜிஎஸ்டி வரி குறைப்பு அல்லது செஸ் வரி ரத்து உள்ளிட்ட ஏதாவது ஒரு சிறு அளவிலான வாய்ப்பு கிடைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்