படப்பிடிப்பு தளத்தில் சிகரெட்டை ஊதித்தள்ளும் இளம் நடிகை! வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை மஹிமா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார்.


இந்த வீடியோ வைரலாகி  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த வீடியோவில் நடிகை மஹிமா புகைபிடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிருந்து வந்தவர் இவர். 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

சாட்டை திரைப்படத்தில் அறிவழகி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்தார். சாட்டை திரைப்படத்திற்கு பிறகு பள்ளி படிப்பை ஒரு ஆண்டு படித்து நிறைவு செய்தார். இதற்கு பின் நடித்த குற்றம் 23 என்ற திரைப்படம் இவருக்கு சிறந்த வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் குடும்ப பாங்கான பெண்ணாக வலம் வருவார்.  ஆனால் தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் "அசுரகுரு" என்ற திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். இது இவருக்கு முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரமாகும்.

பொதுவாக புகை பிடிப்பது  மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளை திரைபடங்களில் இடம்பெறும் போது அதற்கான எச்சரிக்கை வாசகம் திரையில் காண்பிக்கப்படும். முன்னனி நடிகர்களே நடிக்க தயங்கும் இந்த சீன்களில், மஹிமா நடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  என்றே கூறலாம். படப்பிடிப்பு தளத்தில் அவர் புகைத்த காட்சி வைரலாகிறது.