போன் செய்தால் வீடு தேடி வரும் டிவி நடிகைகள்! முக்கிய நகரங்களை கலக்கும் ஹைடெக் விபச்சாரம்!

அலிபாக் நகரில் உள்ள கிம் பீச் அருகே உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் கடந்த வியாழக்கிழ்மை போலீசார் வாடிக்கையாளர்கள் போல அங்கு சென்றனர்.


அப்போது அங்கு சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பெண் போலீசார் உள்ளிட்ட 25 போலீசாரைக் கொண்ட படையினர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

பாலியல் தொழில் நடத்தி வந்த ராக்கி நோட்டானி மற்றும் ரஞ்சிதா சிங் என்ற ரேணு ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். மேலும் சில டிவி நடிகைகளும் அங்கு சிக்கினர். அவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 26 கிராம் கொக்கைன் போதைப் பொருளும் பற்முதல் செய்யப்பட்டது. 

மேலும் அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டிருந்த 7 பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மகளிர் சீர்திருத்தவிடுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ராஜ்கமல், நிகேஷ் மோடி, வருண் அடல்கா, சையத் அமீர் ரஜ்ஜாக், சீமா சிங், ஸ்ருதி கவ்கார், ஆரோஹி சிங் என்ற நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் ரகசிய குறியீடு எண் மூலமாக செல்போனில் தொடபு கொண்டார் டிவி நடிகைகள் வீட்டிற்கு வந்து உல்லாசத்தில் ஈடுபடும் ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை மட்டும் இன்றி சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் இந்த டிவி நடிகைகள் தங்கள் சேவையை வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து நகரங்களிலும் இவர்களுக்கு புரோக்கர்களாக செயல்படுபவர்களை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.