மாதவிடாய் நாட்களில் வேலை செய்ய முடியாத நிலை..! 3 நாள் சம்பளத்திற்காக கருப்பையை நீக்கிய 30 ஆயிரம் பெண்கள்!

மும்பை: கரும்பு தோட்டங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் கருப்பையை அகற்றும் அவலம் நேர்ந்துள்ளது.


மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கரும்பு தோட்டங்களில் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாதவிலக்கு ஏற்படும்போது விடுப்பு எடுக்க வேண்டியதாகிறது. இதனால், 3 அல்லது 4 நாட்களுக்கு கூலி கிடைக்காமல் போகிறது. இதனை தடுக்கும் வகையில், மாநிலம் முழுக்க சுமார் 30,000 பெண்கள் தங்களது கருப்பையை அகற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்பதோடு மிகவும் வேதனை அளிப்பதாகவும் உள்ளது.  

இந்நிலையில், இதுபற்றி மகாராஷ்டிர அமைச்சர் நிதின் ராவத் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு முறையிட்டுள்ளார். இதுகுறித்து நிதின் ராவத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ''பீட், ஒசாமாபாத் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், மாதவிலக்கு ஏற்படுவதை தவிர்த்து, தங்களுக்கு கூலி பாதிப்பின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக கருப்பையை அகற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இது மிகவும் வேதனைக்குரிய விசயமாகும். இதுபற்றி முதல்வரிடம் முறையிட்டுள்ளேன். விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.