பண்ணை வீடு! யாரும் இல்லா தனிமை! மருமகளுக்கு மாமனாரால் ஏற்பட்ட விபரீதம்!

மருமகளையே பாலியல் பலாத்காரம் செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.


நாக்பூர் மாவட்டத்தில் உள்ள மவுடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அவருக்கு கடந்த 14-ஆம் தேதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கணவன் வேலைக்குச் சென்றிருந்ததால் தனது மாமனார் இண்டல் தோம்ப்ரேயை அந்தப் பெண் துணைக்கு அழைத்தார். 

இதனைத் தொடர்ந்து தனது மாமனாருடன் மருத்துவமனைக்குப் புறப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை தனக்கு நேரப்போக்கும் அவலம். மருமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இண்டல் தோம்ப்ரே, சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் தனது மருமகளை ஒரு ஒதுக்குப் புறமான பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. 

அந்தப் பண்ணை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தோம்ப்ரே தனது மருமகளை வலுக்கட்டாயமாக  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை வெளியில் கூறினால் வீட்டில் வெடிக்கும்ப்  பிரச்சினைகளைக் கருதி அந்தப் பெண் மறைத்தில்  தோம்ப்ரே கடந்த 16-ஆம் தேதி மீண்டும் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அதிலிருந்து தப்பிய அந்தப் பெண் நடந்தது அனைத்தியும் தனது கணவனிடம் தெரிவித்தார். 

இதையடுத்து தனது தந்தை மீது அந்தப் பெண்ணின் கணவன் கடந்த 22-ஆம் தேதி காவல்நிலையத்தில் அளித்தபுகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் இண்டல் தோம்ப்ரேயை கைது செய்தனர்.