பெற்ற மகளுக்கு எய்ட்ஸ் ஊசி! கேட்போரை அதிர வைக்கும் தந்தையின் கொடூர செயல்!

காதலுக்கு எதிர்ப்பு; காதலனை ஹெச்.ஐ.வி. ஊசி போட்டுக் கொல்லப் போவதாக மிரட்டிய பெண் குடும்பத்தினர்


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மகள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலனை ஹெச்.ஐ.வி. ஊசி போட்டுக் கொல்லப் போவதாக அவர்களது உறவினர் நீதிமன்றத்திலேயே மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

உயர் வகுப்பைச் சேர்ந்த பூஜா என்ற பெண்ணும் அஜய் என்ற இளைஞனும் கல்லூரியில் சந்தித்து காதலித்தனர். அதற்கு பூஜாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அஜயின் பெற்றோருடன் வசித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி அஜய் வீட்டுக்கு வந்த பூஜாவின் குடும்பத்தினர் பூஜாவை தாக்கியதோடு அஜயின் வீட்டையும் சூறையாடிவிட்டு பூஜாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் பேரில் பூஜாவின் தாய் வீட்டுக்கு சென்று பூஜாவை தேடி கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். 

ஆனால் போலீசார் மெத்தனமாக இருந்த நிலையில் அஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பூஜா தனக்கு தனது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்தார். இந்நிலையில் அஜய் மீது பூஜாவின் பெற்றொர் அகமத்நகர் காவல் நிலையத்தில் அஜய் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சிணை வழக்கு பதிவு செய்த நிலையில், காவல்துறையினரும் கட்டப்பஞ்சாயத்து செய்ய முயற்சித்ததாகக்  கூறப்படுகிறது. இதையடுத்து அஜயும், பூஜாவும் வீட்டை விட்டு ஓடிச் சென்றுவிட்டனர். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நீதிமன்றத்துக்கு வந்த பூஜாவின் உறவினர் ஒருவர் அஜயை எச்.ஐ.வி. கிருமி பாதித்த ஊசி மூலம் குத்திவிடப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தம்பதிகள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.