69வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு முதலமைச்சரின் மனைவி தெரிவித்த வாழ்த்துக்கள் சமூவலைதளங்களில் பலருக்கு பேச்சப் பொருளாகி உள்ளது.
பிரதமருக்கு தவறான வார்த்தையில் பிறந்த நாள் வாழ்த்து! முதலமைச்சரின் மனைவி ட்வீட்டால் சர்ச்சை!

இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனார். அவருக்கு குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அமிருதா பட்னாவிசும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்திருந்தார். அமிருதா பட்னாவிசும் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்த வாசகம் தற்போது விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி என்னதான் அவர் தெரிவித்தார் என்று பார்ப்போம்.
“நாட்டின் தந்தை பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதாகவும் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக அயராது உழைக்க நம்மை தூண்டுபவர் பிரதமர் மோடி” என்று அமிருதா பட்னாவிசும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கொதிப்படைந்த தேசபக்தர்கள் நாட்டின் ஒரே தந்தை அது தேசத் தந்தை மகாத்மா காந்தி மட்டுமே என்று கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
அமிருதா பட்னாவிஸ் மீது ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியவர். அதாவது செல்பி எடுக்க இந்தியாவின் முதல் பயணிகள் சொகுசு கப்பல் ஆங்ரியாவின் உச்சியில் ஏற்றியது, மும்பை-கோவா கப்பல் பாதுகாப்பு வரம்பைக் கடக்க முயன்றது உள்ளிட்டவை அவர் மீது உள்ளன.