இறந்தே பிறந்த குழந்தை! ஆம்புலன்ஸ் வர தாமதம்! கர்ப்பிணி நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் பிரசவத்தின்போது நடிகையும், அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 600 கிலா மீட்டர் தொலைவில் உள்ளது ஹிங்கோலி மாவட்டம்.  

மராத்திய நடிகையான பூஜா ஜூஞ்சரி 2 படங்களில் நடித்துள்ள நிலையில் கர்ப்பம் காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட கடந்த ஞாயிறன்று கோரேகேனில் உள்ள அரச ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்க ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் பூஜாவுக்கு உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாகவும் உடனே 40 கி.மீ தூரத்தில் உள்ள ஹிங்கோலி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்சை வரவழைக்க உறவினர்கள் போராடினர். நீண்ட நேரத்திற்கு பின்னர்தான் அவர்களுக்கு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பிரசவம் நடைபெற்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தாயும், சேயும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து உறவினர்கள் புகார் அளிக்கையில் ஆம்புலன்ஸ் சேவைகள் எப்போதுமே கிராமப்புறங்களை புறக்கணிப்பதாகவும், சரியான நேரத்தில் வந்திருந்தால் பூஜாவை காப்பாற்றி இருக்கலாம் எனவும் வேதனை தெரிவித்தனர்.